நாட்டைத் தட்டி எழுப்பிய பந்த்: ராமதாஸ்
சென்னை:27 சதவீத இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் நடந்த வெற்றிகரமான பந்த் போராட்டம் நாட்டைத் தட்டி எழுப்பியிருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
பிற்படுத்ப்பட்டவர்களுக்கு உயர் கல்வியில் 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால் உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையால் அதற்குப் பெருந்தடை ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் இட ஒதுக்கீடு சட்டத்தை வலியுறுத்தி, அதற்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்த பந்த் போராட்டம் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றுள்ளது.
இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதிக்கு எப்போதுமே தமிழகம் வழிகாட்டியாக திகழ்ந்து வந்திருக்கிறது. எப்போதெல்லாம் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டு வந்ததோ, அப்போதெல்லாம் தமிழகம் முன் நின்று அந்த ஆபத்தை தடுத்து நிறுத்தியிருக்கிறது.
பொது வேலைநிறுத்தத்தினால் தமிழகம் முடங்கிப் போனதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த வேலைநிறுத்தம் நாட்டைத் தட்டி எழுப்பியிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை அவர்களுககு உணர்த்தியிருக்கிறது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications