மீனவர்களைக் காக்க கடிதம் எழுதினால் போதுமா? விஜயகாந்த்
சென்னை:தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி டெல்லிக்கு கடிதம் எழுதினால் போதுமா, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை,
தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் அளித்து, அவர்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஆனால் இந்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு அன்றாடம் மீனவர்கள் குண்டடி பட்டு சாவதே சான்றாகும்.
குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையைப் போல இந்திய அரசின் கடற்படைத் தலைவர், விடுதலைப் புலிகள்தான் தமிழக மீனவர்களின் சாவுக்குக் காரணம் என்கிறார். ஆனால் தப்பி வந்த மீனவர்களோ, தங்களைச் சுட்டவர்கள் சிங்கள மொழியில் பேசினர் என்கிறார்கள்.
இதிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் யாரை நம்புவது? எவ்வாறு வாழ்க்கையை நடத்துவது? என்ற பிரச்சினைக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக அரசோ, டெல்லிக்கு கடிதம் எழுதினால் போதும் என நினைக்கிறது. இப்படி அலட்சியமாக நடந்து கொள்ளும் மத்திய, மாநில அரசுகளின் போக்கை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தி மீன் பிடிக்க வழி செய்ய வேண்டும். அவர்களது வறுமையைப் போக்க மாதம்தோறும் வாழ்வூதியம் வழங்க வேண்டும்.
இதுவரை இறந்த 8 மீனவர்களின் குடும்பங்களுக்கும் தேமுதிக சார்பில் தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
அதிமுகவும் நிதியுதவி
இதேபோல, அதிமுகவும் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக மீனவர் அணிச் செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் 5 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 25 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications