இளங்கோவன் முன்னிலையில் வாசன் ஆதரவாளருக்கு சரமாரி அடி, உதை
திருநெல்வேலி:மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு கருப்புக் கொடி காட்டிய மத்திய அமைச்சர் ஜி.ேக.வாசனின் ஆதரவாளரை, இளங்ேகாவன் ஆதரவாளர்கள் தெருவில் போட்டு புரட்டி புரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் காங்கிரஸில் பல கோஷ்டிகள் உள்ளன. அதற்கேற்ப நெல்லை மாவட்டத்திலும் ேகாஷ்டிகள் உண்டு. அதில் பிரதானமான கோஷ்டிகள் வாசன் மற்றும் இளங்ேகாவன் கோஷ்டிகள்.
மாவட்ட தலைவர் முத்தையா இளங்ேகாவன் ேகாஷ்டியைச் சேர்ந்தவர். சமீபத்தில் வாசன் ேகாஷ்டியைச் சேர்ந்த நகர, வட்டாரத் தலைவர்கள் ஏழு பேரை கட்சியை விட்டு நீக்கினார் முத்தையா.
இதனால் கடுப்பான ஏழு பேரும் சென்ைனக்குச் சென்று வாசனிடம் முறையிட்டனர். அவரது தலையீட்டின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளரான வீரப்ப ெமாய்லியிடமிருந்து, கட்சியை விட்டு நீக்கப்படவில்லை, பொறுப்புகளில் தொடருவதாக கடிதம் வாங்கிக் ெகாண்டு நெல்லை வந்தனர்.
அது முதலே இரு தரப்பினருக்கும் இைடேய உராய்வு அதிகமாக இருந்தது. இந்த நிலையில், இளங்ேகாவனும், கிருஷ்ணசாமியும் நெல்லைக்கு நேற்று வந்தனர்.
கடையநல்லூர் வந்த அவர்களுக்கு அங்கு இளங்ேகாவன் ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு ெகாடுத்தனர். அப்போது வாசன் கோஷ்டியைச் சேர்ந்த மாரிப்பாண்டி என்ற காங்கிரஸ் தொண்டர், இளங்ேகாவனுக்கும், கிருஷ்ணசாமிக்கும் கருப்புக் கொடி காட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக் ெகாண்ட இளங்கோவன் ேகாஷ்டியினர், மாரிப்பாண்டியை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து ெநாறுக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு போலீஸ்காரர் அவர்களை விலக்கி விட முயன்றார். ஆனால் அதையும் மீறி மாரிப்பாண்டியை கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து புரட்டி புரட்டி அடித்தனர்.
கிருஷ்ணசாமியும், இளங்ேகாவனும் அங்கு இருந்தபோதே, அவர்களு கண் முன்பாகவே இந்த சாத்துப்படி நடந்தது. பின்னர் ஒரு வழியாக இளங்ேகாவன் கோஷ்டியிடமிருந்து மாரிப்பாண்டியை மீட்ட போலீஸார், படுகாயமைடந்த நிலையில் பரிதாபமாகக் காணப்பட்ட அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் காட்சியைப் புைகப்படம் எடுத்த பத்திரிக்கையாளர்கள் மீதும் காங்கிரஸார் பாய்ந்தனர். கேமராக்களைப் பிடுங்கி பிலிம் ரோலை உருவ முயன்றனர். போலீஸார் தலையிட்டு கேமராக்களை வாங்கிக் கொடுத்தனர்.
ஒரு ஆளை, பத்து பதினைந்து பேர் சேர்ந்து சரமாரியாக அடித்து ெநாறுக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காந்தி அன்றே சொன்னார், காங்கிரஸை கலைத்து விடலாம் என்று. யாராவது கேட்டால்தானே!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications