ஜெயசூர்யா அட்டகாசம் - இலங்கை அபார வெற்றிஅரை இறுதி வாய்ப்பை இழக்கிறது மே.இ. தீவு
ஜார்ஜ்டவுன்:மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான சூப்பர் எட்டுப் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி ெபற்றது. தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்துள்ளால் அரை இறுதிக்குள் நுைழயும் வாய்ப்பை இழக்கும் அபாயத்தை மேற்கு இந்தியத் தீவுகள் அணி சந்தித்துள்ளது.
சூப்பர் எட்டு சுற்றில் இடம் ெபற்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், இலங்கையும் நேற்று ஜார்ஜ்டவுனில் நடந்த போட்டியில் மோதின. ஏற்னவே இரு போட்டிகளில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தோற்றிருந்ததால் நேற்றைய போட்டியில் கண்டிப்பாக வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் இருந்தது.
இதனால் நேற்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான தரங்கா மற்றும் விக்கெட் கீப்பர் சங்க்காரா ஆகிேயார் ெசாற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் ஜெயசூர்யாவும், கேப்டன் ஜெயவர்த்தனேவும் இணைந்து அதிரடி ஆட்டத்தில் குதித்தனர். குறிப்பாக ஜெயசூர்யா படு சிறப்பாக ஆடினார். விறுவிறுப்பாக ஆடிய ஜெயசூர்யா 115 ரன்களைக் குவித்து அணிக்குப் பலத்தைக் கூட்டினார். இது அவரது 25வது ஒரு நாள் சதமாகும்.
மறு முனையில், ெஜயவர்த்தனேவும் சிறப்பாக ஆடி 82 ரன்களைக் குவித்தார். சமரசில்வா 23, தில்ஷன் 39 ரன்களை எடுத்தனர். 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 303 ரன்களைக் குவித்தது இலங்கை.
பின்னர் களம் இறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி படு மோசமாக ஆடி 190 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி ெபற்றது.
பேட்டிங்கில் பின்னி எடுத்த ஜெயசூர்யா, பந்துவீச்சிலும் அபாரமாக ஆடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் சந்தர்பால் மட்டும் சிறப்பாக ஆடி 76 ரன்களை எடுத்தார். ராம் நரேஷ் சர்வான் 44 ரன்கள் எடுத்தார். லாரா 2 ரன்களில் வீழ்ந்தார். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பிரேவோ 21 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இது தொடர்ச்சியான 3வது தோல்வி ஆகும். இதன் மூலம் அரை இறுதிக்கு முன்ேனறும் வாய்ப்பை மேற்கு இந்தியத் தீவுகள் அணி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் பிற அணிகள் வெற்றி, ேதால்வியைப் பெறுவதைப் பொருத்தே மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு அமையும்.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications