பொடா வழக்கிலிருந்து நெடுமாறன்-சுப.வீ விடுதலை
சென்னைவிடுதலைப் புலிகளை ஆதரித்து கூட்டம் நடத்தியதாக கூறி கடந்த அதிமுக ஆட்சியில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட 5 ேபர் அந்த வழக்கிலிருந்து நிரந்தரமாக விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரல் 13ம் ேததி சென்னை ஆனந்த் தியேட்டர் வளாகத்தில் திறனாய்வு கூட்டம் நடந்தது. தமிழ் முழக்கம் பதிப்பாளர் ஷாகுல் ஹமீது என்பவர் இதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த கூட்டத்தில் பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், டாக்டர் தாயப்பன், புதுக்ேகாட்டை பாவாணன், பாடலாசிரியர் அறிவுமதி, வழக்கறிஞர் அருள்மொழி உள்ளிட்ேடார் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் கலந்து ெகாண்டவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ேபசியதாக நெடுமாறன், சுப.வீ, பாவாணன், ஷாகுல் ஹமீது, தாயப்பன் ஆகிேயார் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேலூர் சிறையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஐந்து பேரும் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலையாகி வந்தனர். அவர்கள் மீதான வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
பின்னர் ஐந்து பேரும் தங்கள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி பொடா மறு ஆய்வுக் கமிட்டியிடம் விண்ணப்பித்தனர். அதை பரிசீலித்த மறு ஆய்வுக் கமிட்டி, ஐந்து பேர் மீதான வழக்குக்கும் முகாந்திரம் ஏதும் இல்லை. எனவே அவர்களை விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் அதிமுக ஆட்சியில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஐந்து பேர் மீதான வழக்கையும் திரும்பப் பெற முடிவு செய்தது.
இதுதொடர்பாக தமிழக அரசின் வழக்கறிஞர் வெங்கடசுப்ரமணி, பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தியாகராஜ மூர்த்தி, பொடா வழக்கிலிருந்து நெடுமாறன் உள்ளிட்டவர்களை நிரந்தரமாக விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.
இதன் மூலம் பொடா வலையிலிருந்து நெடுமாறன் உள்ளிட்டவர்கள் வெளியில் வந்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications