பெரியாறு: கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:முல்லை பெரியார் அணை பிரச்சனை குறித்து விளக்கம் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிள்ளது.
பெரியார் அணையின் நீர்மாட்டத்தை 135 அடியில் இருந்து 142 அடியாக உயர்ந்த கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் 142 அடி வரை நீரை தேக்கலாம் என உத்தரவிட்டது. ஆனால் இதை கேரள அரசு ஏற்க மறுத்து விட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துமாறு கேரளா அரசுக்கு உத்தரவிடக் கோரியும், பெரியாறு அணை குறித்து கேரள அரசு கடந்த ஆண்டு இந்திய திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும் ஆர்.கே ராமச்சந்திரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் பெரியாறு வைகை ஒரு போகசாகுபடி விவசாயிகள் தங்கள் சார்பில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.கே.தாக்கா, அல்தமஸ்கபீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது கேரளா அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்துள்ள மூல வழக்கு நிலுவையில் இருக்கும் போது புதிதாக இந்த 2 மனுக்களுக்கு அவசியமில்லை என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு, தமிழக, கேரளா அரசுகள் ஆகியவற்றுக்கும், மத்திய நீர்வள ஆணைய தலைவர், பெரியாறு அணை மதுரை கோட்ட கண்காணிப்பு பொறியாளர், கம்பம் நிர்வாக பொறியாளர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications