பல்கலை. மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஆசிரியர் கைது
சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சண்டிகரைச் சேர்ந்த மாணவி சேத்னா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ. படித்து வந்தவர் சேத்னா (20). மார்ச் 26ம் தேதி சேத்னா பரீட்சை எழுதிக் கொண்டிருந்தபோது அவர் காப்பி அடித்து விட்டார் என்று கூறி மாணவ, மாணவியர் முன்னிலையில் பேராசிரியர் ரகுராமன் சேத்னாவைத் திட்டியுள்ளார்.
இதனால் அவமானமடைந்த சேத்னா, தனது அறைக்குத் திரும்பி அங்கு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர், அது பெரும் வன்முறையாக மாறியது. பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறையும் விடப்பட்டது.
சர்ச்சையில் சிக்கி ரகுராமனும், அவருடன் சேர்ந்து சேத்னாவைத் திட்டிய பேராசிரியர் மணிக்குமாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களில் ரகுராமன் மீது ஏராளமான பேர் புகார் கூறியதால் அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
சேட்னாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார் ரகுராமன். தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு சேத்னாவை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் இதை ஏற்கவில்லை சேத்னா. இருந்தாலும் விடாத, ரகுராமன், செல்போன் மூலம் சேத்னாவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். கிட்டத்தட்ட 2,900 எஸ்.எம்.எஸ்.களை அவர் அனுப்பியுள்ளாராம்.
ஆனாலும் தன்னை சேத்னா புறக்கணித்து வந்ததால் ஆத்திரமடைந்த ரகுராமன், பரீட்சை ஹாலில் வைத்து அவரை அவமானப்படுத்தியுள்ளார். இதையடுத்து ரகுராமனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications