இலங்கை அரசு, புலிகளுக்கு இந்தியாவின் அறிவுரை
டெல்லி:இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்தி விட்டு அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
2 நாள் சார்க் மாநாட்டின் நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை இனப் பிரச்சினைக்கு போர் தீர்வு அல்ல. இரு தரப்பும் உடனடியாக சண்டையைக் கைவிட்டு விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். நின்று போயுள்ள பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.
இலங்கையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு இந்தியா சில யோசனைகளைத் தெரிவித்துள்ளது. அதுகுறித்து விவாதித்து விரைவில் ஒரு தீர்வை இலங்கை அரசு காண வேண்டும்.
இலங்கையில் வசிக்கும் சிங்களர்கள், தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு இனத்தவரின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் விதமான தீர்வு எட்டப்பட வேண்டும். ராணுவத் தீர்வுக்கு சாத்தியமே இல்லை என்பதை இரு தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கு ஆபத்து என்று கூற முடியாது. இந்தியா தீவிரவாதத்தின் விளைவுகளை அனுபவித்து வரும் நாடு. தீவிரவாதம், இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கும் தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றார் முகர்ஜி.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications