நுழைவுத் தேர்வால் கஷ்டமே மிச்சம்: தமிழக அரசு
சென்னை:நுழைவுத் தேர்வால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதாலேயே அதை தமிழக அரசு ரத்து செய்தது என்று தமிழக அரசு கூறியள்ளது.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புக்கான நுழைத் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து அஸ்வின்குமார் என்ற மாணவர் உள்பட ஐந்து பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் உயர் கல்வித்துறைச் செயலாளர் கருப்பையா அரசின் சார்பில் விளக்க மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், மாணவர்களின் எதிர்காலத்தை ஒரே ஒரு தேர்வு மூலம் நிர்ணயிக்கும் முறையாக நுழைவுத் தேர்வு விளங்கி வந்தது. மேலும், இந்தத் தேர்வு முறையால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பல்வேறு துயரங்கள் ஏற்பட்டன.
எனவேதான் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய அரசு முடிவு செய்தது.
நுழைவுத் தேர்வை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றதல்ல.
நுழைவுத் தேர்வு என்பது அதிக செலவீனம் பிடித்த ஒன்று மற்றும் குழப்பமான தேர்வு முறையும் ஆகும். தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலம் பல்வேறு கல்வித் திட்டங்களில் படித்து வரும் மாணவர்களிடையே சமச்சீர் தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, அகில இந்திய தொழில் கல்வி கவுன்சில், இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவை பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப பிறப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணை ஏப்ரல் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications