சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும்நில உச்சவரம்பு தேவை: டாக்டர் ராமதாஸ்
சென்னை:சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்போருக்கும் நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சரவை புதிய பரிந்துரைகளை அறிவித்துள்ளது.
இனிமேல் பொருளாதார மண்டலங்களுக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்தும் வேலையை மாநில அரசுகள் செய்யக் கூடாது என்பது இதில் முக்கியமான ஒன்று.
தேவைப்படும் நிலத்தை பொருளாதார மண்டலத்தில் நிறுவனங்கள் அமைக்க உள்ளவர்களே முயன்று பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது வரவேற்புக்குரியது.
ஆனால், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக தேவைப்படும் நிலத்தின் அளவு 5,000 ஹெகடேர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுதான் சற்றே இடிக்கிறது. அதாவது 5000 ஹெக்டேர் என்பது 12 ஆயிரம் ஏக்கர். இதில் பாதியளவு நிலத்தை உற்பத்தித் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு கூறுகிறது.
அப்படியானால், மீதம் உள்ள நிலத்தை ரியல் எஸ்டேட் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடிய ஆபத்துக்கள் உள்ளன. இதனால் விவசாய நிலங்களை வாங்கி வீடு கட்டி விடும் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான் அதிக அளவில் சிறப்பு பொருளாதார மையங்களை அமைக்க ஆர்வம் காட்டுகின்றன. இவற்றுக்கு 25 ஏக்கர் நிலம் போதுமானது. 5000 ஹெக்டேர் அளவுக்கு இவற்றுக்கு நிலம் தேவையில்லை.
எனவே நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் கொண்டு வர வேண்டும். அவர்களுக்கும் நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்தார் முறையை மீண்டும் கொண்டு வர அரசே காரணமாகி விடும் அபாயம் உள்ளது.
அதேபோல சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக நிலம் கொடுக்க முன்வரும் விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அந்த நிறுவனம் வேலை தர வேண்டும். நிலப் பதிவின்போதே இதுதொடர்பான வேலை நியமன உத்தரவையும் அந்த நிறுவனம் வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications