மக்கள் மீது தடியடி-இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி
சென்னை:சாலை மறியல்வர்கள் மீது இன்ஸ்பெக்டர் தடியடி நடத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த இன்ஸ்பெக்டரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தர்ம அடி கொடுத்த நையப்புடைத்தனர்.
சென்னை திரிசூலம் பகுதியில் கல் குவாரிகள் நிறைய உள்ளன. அங்குள்ள கென்னடிவேலி என்ற பகுதியில் வசிக்கும் தாசன் என்பவர், அல்போன்ஸ் என்கிறவரிடம், கிரஷரை (கல் உடைக்கும் நிலையம்) மூடப் போகிறார்கள். நீங்கள் எல்லாம் உங்கள் ஊரைப் பார்க்க போக வேண்டியதுதான் என்று கூறி கேலியாகப் பேசியுள்ளார். ஜாதியைச் சொல்லியும் திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அல்போன்ஸ் தன் தரப்பு ஆட்களிடம் போய் இதைச் சொல்லியுள்ளார். கொந்தளித்துப் போன 500 பேர் தாசன் வீடு முன்பு திரண்டனர். அவரது வீட்டின் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர்.
பின்னர் மூரவசம்பட்டு சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையில் பழவந்தாங்கல் போலீஸார் விரைந்து வந்தனர்.
அனைவரையும் கலைந்து போகுமாறு கோதண்ராமன் கூறினார். ஆனால் யாரும் அசைவதாக இல்லை. இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் மீது கோதண்டராமன் திடீரென தடியடியில் இறங்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோதண்டராமனை சுற்றிச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடிக்க ஆரம்பித்தனர். இதனால் வலி பொறுக்க முடியாமல் அலறினார் கோதண்டராமன்.
தகவல் அறிந்ததும் பரங்கமலை துணை ஆணையர் அருண் அங்கு விரைந்து வந்தார். பொதுமக்களின் பிடியிலிருந்து கோதண்டராமனை மீட்டார். பின்னர் போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications