8ம் நூற்றாண்டு முருகன் கோவில் கண்டுபிடிப்பு
காஞ்சிபுரம்:மகாபலிபுரம் அருகே 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவில் ஒன்று அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மகாபலிபுரம் அருகே உள்ள சலவன்குப்பம் என்ற இடத்தில் ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு, கடலோரத்தில் ஒரு சிறிய பாறை கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு ஏதாவது பழங்காலச் சின்னங்கள் மறைந்திருக்கக் கூடும் என்று யோசித்த இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தினர் அங்கு அகழ்வாராய்ச்சியில் இறங்கினர். இந்த ஆய்வின் விளைவாக பழமையான முருகன் கோவில் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள முருகன் கோவிலின் பல பகுதிகள் அழிந்து விட்டாலும் கூட கோவிலின் பல பகுதிகள் கிடைத்துள்ளன. இந்தக் கோவில் 1800 ஆண்டுகள் பழமையானவை.
இதுகுறித்து தொல்பொருள் ஆய்க் கழக கண்காணிப்பாளர் சத்யபாமா கூறுகையில், இந்தக் கோவில் முழுக்க முழுக்க சுண்ணாம்புக் கலவையாலும், செங்கலலாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு 13வது நூற்றாண்டு வரை வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்துள்ளதற்கான் சான்றுகள் கிடைத்துள்ளன.
சங்க கால காணப்பட்ட சிற்பங்கள், விளக்குகள், நந்தி, கலசம் போன்றவை இந்தக் கோவிலில் காணப்படுகிறது.
கோவிலில் பெரிய மகா மண்டபம் இருந்துள்ளது. இரண்டு கிணறுகளும் இருந்துள்ளன. மேலும் சுண்ணாம்புக் கல்லால் உருவாக்கப்பட் பெரிய பிரகாரமும் இருந்துள்ளது.
கோவிலில் காணப்படும் கல்வெட்டில், இக்கோவில் திருவிழிச்சூர் என்ற இடத்தில் கட்டப்பட்டதாகவும், எட்டாவது நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டதாகவுவம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலின் முன்புறம் அழகான வேலும் நிறுவப்பட்டுள்ளது. அந்த வேலும் இப்போது முழுமையாக கிடைத்துள்ளது.
வழக்கமாக மரம், செங்கல் உள்ளிட்ட பொருட்களால்தான் அந்தக் காலத்தில் கோவில்களைக் கட்டுவார்கள். ஆனால் முதல் முறையாக சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட கோவில் கிடைத்துள்ளது. அதேபோல களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட நந்தி சிலையும் பார்க்க வித்தியாசமாக உள்ளது என்றார் சத்யபாமா.
இந்தக் கோவில் குறித்து மேலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications