விழுப்புரம் வெடிவிபத்து: 5 பேருக்கு வலைவீச்சு
திண்டிவனம்:விழுப்புரம் அருகே வெடிவிபத்தில் 16 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குக் காரணமான 5 பேருக்கு போலீஸார் வலை வீசியுள்ளனர். இதுதொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் அருகே செண்டூரில் வெடிபொருட்கள் ஏற்றிச் சென்ற வாகனம் வெடித்துச் சிதறியதில் 16 பேர் கொல்லப்பட்னர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, புதுவை மாநிலம் மணலிப்பேட்டையில் வெடிபொருள் விற்பனை நிலையத்தை வைத்துள்ள சேகர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஐந்து பேரையும் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சேகர் புதுவையில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.
தென்னாலப்பாக்கத்தில் உள்ள சேகருக்குச் சொந்தமான வெடிபொருள் கிட்டங்கிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் அவசர ஆலோசனை:
இதற்கிடையே, வெடிவிபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் தலைமைச் செயலாளர் திரிபாதி, டிஜிபி முகர்ஜி, உள்துறை, வருவாய், பொதுத்துறை செயலாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications