மருந்து கடைக்காரரின் கள்ள காதலிகள்: மீட்டுதருமாறு போலீஸாரிடம் மனைவி கதறல்
சென்னை:2 கள்ளக்காதலிகளுடன் வாழ்ந்து வரும் தனது கணவரை மீட்டு தன்னுடன் குடும்பம் நடத்துமாறு அறிவுறுத்த வேண்டும் எனக் கோரி மருந்துக் கடைக்காரரின் மனைவி சென்னை காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார்.
சென்னை கொசப்பேட்டையைச் சேர்ந்தவர் கலா. 34 வயதாகும் இவர் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், எனக்கும், எனது கணவர் கணேஷ்குமாருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.
மருந்துக் கடை நடத்தி வருகிறார் எனது கணவர். அவருக்கு இரண்டு பெண்களுடன் தொடர்பு உள்ளது. கவுசல்யா என்ற பெண்ணை எனக்குத் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டுள்ளார். அதுபோல தற்போது ரூபா என்ற இன்னொரு பெண்ணையும் வைத்துக் குடும்பம் நடத்துகிறார்.
இவர்களுடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பு காரணமாக என்னையும், குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து விட்டார். என்னை விவகாரத்து செய்யப் போவதாகவும் மிரட்டுகிறார். அத்தோடு இல்லாமல், கவுசல்யாவும் எனக்குப் போன் செய்து மிரட்டுகிறார்.
எனவே எனது கணவரை அவரது இரண்டு கள்ளக்காதலிகளிடமிருந்து மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கலா.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications