அரை இறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து
ஜார்ஜ்டவுன்:அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து.
உலகக் கோப்பைப் போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத அணி நியூசிலாந்து. நேற்று ஜார்ஜ்டவுனில் நடந்த போட்டியில் அயர்லாந்து அணியை சந்தித்தது.
வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு இல்லாவிட்டாலும் கூட, போராடக் கூடிய அணி என்பதால் நேற்றைய போட்டியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கவனத்துடன் அயர்லாந்தை சந்தித்தது நியூசிலாந்து.
முதலில் நியூசிலாந்து பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் பீட்டல் புல்டன் சிறப்பாக ஆடி 83 ரன்களைக் குவித்தார். பிரன்டன் மெக்கல்லம் 37 பந்துகளில் 47 ரன்களைக் குவித்தார். இவரும், ஜெம்ஸ் பிராங்க்ளினும் (34 நாட் அவுட்) இணைந்து 71 ரன்களைச் சேர்த்தனர்.
ஆரம்பத்தில நிதானமாக ஆடிய நியூசிலாந்து வீரர்கள், அதன் பின்னர் அடித்து ஆடினர். கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் 59 ரன்களைச் சேர்த்தனர்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுக்களை இழந்து 263 ரன்களைச் சேர்த்தது நியூசிலாந்து.
பின்னர் ஆடிய அயர்லாந்து ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது. ஓபிரையன் மட்டுமே சற்று தாக்குப் பிடித்து ஆடி 49 ரன் எடுத்தார். மற்ற யாரும் சொல்லிக் கொள்ளும்படி ரன் எடுக்கவில்லை.
37.4 ஓவர்களிலேயே அயர்லாந்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 134 ரன்களை மட்டுமே எடுத்து 129 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது அயர்லாந்து.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 8 புள்ளிகளுடன் அரை இறுதிக்குள் நுழைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications