காவிரி-ஒரு வாரத்தில் கர்நாடகம் மேல்முறையீடு
Subscribe to Oneindia Tamil
பெங்களுரூ:காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து ஒரு வாரத்திற்குள் கர்நாடகம் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அம் மாநில நீர்வளத்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
காவிரி பிரச்சனையில் நடுவர் மன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யவேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் மேல்முறையீடு செய்யப்படும்.
தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் நடுவர் மன்றம் பங்கீடு செய்துள்ள நீரின் அளவு, கர்நாடகத்திலுள்ள குடிநீர் பற்றாக்குறை, 405 டிஎம்சி தண்ணீருக்கு மேல் விவசாயத்திற்கு தேவைப்படும் நீரின் அளவு ஆகியவற்றை சுட்டிக் காட்டி இத்தீர்ப்பினை ரத்து செய்யுமாறு மனு செய்யவுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications