3 லாரிகள் மோதல்- பாறை மீது மோதி தீப்பிடித்து 7 பேர் பலி
தர்மபுரி:பாறையின் மீது மினி லாரி மோதி தீப்பிடித்துக் கொண்டதில் அதிலிருந்த 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
ஆந்திராவிலிருந்து கடப்பா கல் ஏற்றி கொண்டு சேலம் தொப்பூர் வழியாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. கணவாய்ப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது இந்த லாரியின் பாரம் ஒரு பக்கமாக சாய்ந்து கவிழ்ந்தது.
இதன் பின்னால் தென்னை நார்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. கடப்பா கல் லாரி திடீரென கவிழ்ந்ததால், அதன் மோதமல் இருக்க லாரியை வலப் பக்கமாக திருப்பினார் தென்னை நார் ஏற்றி வந்த லாரி டிரைவர்.
இதனால் அந்த லாரி கட்டுபாட்டை இழந்து சாலையின் மத்திய தடுப்பை உடைத்துக் கொண்டு எதிரே பூக்களை ஏற்றி வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதனால் பூ ஏற்றி வந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி பாறையின் மீது மோதியது. உடனே தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அந்த லாரியில் இருந்த 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
ஒரே நேரத்தில் நடந்த 3 லாரிகளின் விபத்தினால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தொடர் விபத்தில் மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications