நாணயத்தில் கிராஸ்- ஆர்எஸ்எஸ் பாய்ச்சல்
டெல்லி:புதிய இரண்டு ரூபாய் நாணயத்தில் கிறிஸ்துவ மதத்தை வளர்க்கும் விதமாக சிலுவை சின்னம் போடப்பட்டுள்ளதாகவும், இந்த நாணயத்தை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட்டுள்ள ரூ.2 நாணயத்தின் ஒரு பக்கத்தில் கூட்டல் அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி, இது ஒற்றுமையின் சின்னம் என விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், விஎச்பி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள், இது கிறிஸ்துவர்களின் சிலுவை சின்னம் என்கின்றன.
மேலும் இதை திரும்பப் பெறவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்ஷன் கூறுகையில்,
இந்த நாணயத்தில் சிலுவை பொறிக்க சொன்னது யார், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என நாட்டு மக்களுக்கு ரிசர்வ் வங்கி தெரிவிக்க வேண்டும்.
கிறிஸ்துவத்தை வளர்ப்பதற்காக தான் இந்த சின்னத்தை பொறித்ததாக ஆர்எஸ்எஸ் கருதுகிறது. எனவே இந்த ரூ.2 நாணயத்தை திரும்ப பெற வேண்டும் என்றார்.
ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் ராம்மாதவ் கூறுகையில்,
மத சின்னங்களை நாணயத்தில் பொறிக்கப்படுவதால் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும். இதே போன்று அனைத்து மதத்தினரும் தங்கள் மதசின்னத்தை நாணயத்தை வெளியடும்படி போராட்டம் நடத்துவார்கள்.
ரோம் நகர பேரரசர் லூயிஸ் வெளியிட்ட நாணயத்தில் இதே போல் சிலுவை அடையாளமும் 4 புள்ளிகளும் இடம்பெற்றிருந்தது. இந்த 4 புள்ளிகள் பைபிளில் உள்ள 4 அதிகாரங்களை குறிப்பதாகும்.
எனவே இந்த நாணயங்களை திரும்ப பெறவேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications