பந்த்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தை கண்டித்து தமிழகத்தில் நடந்த பந்த்க்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனைக் கண்டித்து கடந்த மாதம் தமிழகம் முழுவதும் ஒருநாள் பந்த் நடைபெற்றது.
பந்துக்கு திமுக கூட்டணி அழைப்பு விடுத்தது.
பந்துக்கு தடை விதிக்க கோரி சென்னை டிராபிக் ராமசாமி, சிவகுமார் ஆகியோர் பொது நல வழங்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கை நீதிபதி முகோபத்யா முன்பு விசாரணைக்கு வந்த போது பந்துக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி அறிவித்தார்.
இதையடுத்து இந்த மனு இன்று காலை நீதிபதிகள் தர்மாராவ், பழனிவேல் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பந்து நடந்து முடிந்து விட்டது. எனவே இந்த மனு செயல் இழந்ததாகி விடுகிறது என நீதிபதிகள் கூறினார்கள்.
அதற்கு டிராபிக் ராமசாமி வாதாடும் போது அரசியில் கட்சிகள் பந்த் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த பந்த் மூலம் ரூ. 750 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மனு மீது விசாரணை நடத்தினால் எதிர்காலத்தில் பந்த் நடத்தாமல் இருக்க விதி ஏற்படும் என கூறினார்.
இதை ஏற்ற நீதிபதிகள் இன்னும் 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications