மலிங்கா காயம்-ஆஸி.யுடனான போட்டியில் ஓய்வு
கிரெனடா: ஆஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இன்று நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஆட மாட்டார் எனத் தெரிகிறது.
உலககோப்பை சூப்பர் 8 சுற்றின் இன்றைய போட்டியில் முன்னாள் சாம்பியன் இலங்கையும், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன. யாராலும் வெல்ல முடியாத அணியாக ஆஸ்திரேலியா அட்டகாசமான நிலையில் உள்ளது. இலங்கையும் கடும் போட்டியைக் கொடுத்து வரும் அணியாக உள்ளது.
சூப்பர் 8 சுற்றில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும், இரண்டாம் இடத்தில் நியூசிலாந்தும், மூன்றாவது இடத்தில் இலங்கை அணியும் உள்ளது. இந்த மூன்று அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன.
இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியாவும், இலக்கையும் மோதுகிறது. இதில் உலககோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா விளையாட மாட்டார் என அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மூடி கூறுகையில், வியாழக்கிழமை நியூசிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் மலிங்காவுக்கு இட கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்பது போட்டி தொடங்கும் முன்பு தான் தெரியும் என அவர் கூறினார்.
நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக மலிங்கா திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications