சென்னையில் நடந்த மெகா சுயம்வரம்
சென்னை:தமிழ் மேட்ரிமோனியல்.காம் நடத்திய மெகா சுயம்வரம்-2007 நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடந்தது .
சென்னையில், பாரத் மேட்ரிமோனியல் இணைய தளத்தின் தமிழ் மேட்ரிமோனியல் பிரிவு மெகா சுயம்வரம் 2007 என்ற நிகழ்ச்சியை நடத்தியது.இந் நிகழ்ச்சியில் வெவ்வேறு வகுப்பினை சேர்ந்த தமிழர்கள் 10,000 பேர் கலந்து கொண்டனர். இதில் 2,500 பேர் ஒரே கூரையின் கீழ் கூடி தங்கள் வாழ்க்கை துணையை தேடிக் கொண்டனர். ஒேர இடத்தில் இத்தனை பேர் ஒேர நாளில் துணை தேடிக் கொண்டது உலகிலேயே இதுவே முதல் முறையாகும்.
இந்நிகழ்ச்சி 3 முக்கிய பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் முக்கியமாக சாதி தடையில்லை என்ற வரன்களுக்கான நடந்த நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பாரத் மேட்ரிமோனியல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முருகவேல் ஜானகிராமன் கூறுகையில்,
பாரத் மேட்ரிமோனியல் நிறுவனம் நடத்திய இந்த நிகழ்ச்சி வரன்கள் தங்களுக்குரிய பொருத்தமான துணையை தேடிக் கொள்ள ஒரு நல்ல வழிக்காட்டியாக இருந்தது. இவ்வாறு உதவியதில் மிகுந்த பெருமையடைகிறோம்.
சுயம்வரம் நிகழ்ச்சி மூலம் வரன் சார்ந்த குடும்பங்களுக்குள் நேரிடையாக பேசிக் கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைக்கிறது. இந்தியா முழுவதும் கடந்த 6 மாதங்களில் 27 சுயம்வரம் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம் என்றார்.
இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டில் இவர்கள் நடத்திய 2 வது நிகழ்ச்சியாகும். முதலாவதாக கடந்த 2002ம் வருடம் சுயம்வரம் நடத்தினர். அப்போது தமிழ்நாட்டில் 5,000 பேர் கலந்து கொண்டனர். அதில் பல்வேறு இனத்தவர்கள் 1,600 பேர் வரன் தேடினர்.
இது தமிழ் மேட்ரிமோனியல் இணையதளத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கும் மட்டுமின்றி உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் இந்த சேவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications