சு.சுவாமியை சந்திக்க மறுத்த கருணாநிதி
சென்னை:ராமர் பாலத்துக்கு சேதமில்லாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து கருணாநிதியிடம் பேச முயன்ற போது என்னை சந்திக்க அவர் மறுத்துவிட்டார் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து சுவாமி கூறுகையில்,
இந்தியாவிற்கு பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சேது சமுத்திர திட்டத்தை எதிர்க்கவில்லை. ராமர் பாலத்தை சேதப்படுவதை தான் எதிர்க்கிறோம்.
ராமர் பாலம் கி.பி.1480 வரை நடைப்பாதையாக உபயோகத்தில் இருந்ததாக பழைய ஆவணங்களில் குறிப்பு உள்ளது.
இந்த சேது சமுத்திர திட்டத்தை தனுஷ்கோடி வழியாக மாற்றி அமைத்து நிறைவேற்றினால் ரூ.600 கோடியை மிச்சப்படுத்தலாம். இதுகுறித்து ஆதாரங்களுடன் முதல்வர் கருணாநிதியை சந்திக்க முயன்ற அவர் மறுத்துவிட்டார்.
ஆனால் எனது கடிதத்திற்கு அவர் 2 மணி நேரத்தில் பதில் அளித்தது மகிழ்ச்சியை தந்தது.
அந்த பதில் கடிதத்தில் ராமர் பாலத்தை கற்பனை என அவர் கூறியிருப்பது மனதுக்கு வேதனை அளிப்பதோடு இந்து கலாசாரத்தின் மீது கருணாநிதி கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது என்றார் சுவாமி.
சுவாமிக்கு கருணாநிதி அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், ராமர் பாலம் என்பதே ஒரு கற்பனைக் கதை தான். அதை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு, தமிழர்களுக்கு நலம் பயக்கும் ஒரு திட்டத்தை எதிர்ப்பது சரியல்ல என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications