ரயில் விபத்து: பலியானோர் குடும்பங்களுக்குநிதியுதவி-வாரிசுகளுக்கு அரசு வேலை
சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் என்ற இடத்தில், வேன் மீது ரயில் மோதியதில் இறந்த 11 பேரின் குடும்பங்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளன. இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகம் தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இறந்தவர்களில் 9 பேர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பதால் அவர்களுக்கு இறந்த பின்னர் கிடைக்கும் குடும்ப நல நிதியாக ரூ. 1 லட்சம் வழங்கப்படும். எனவே கிராம நிர்வாக அலுவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2.50 லட்சம் இழப்பீடும், மற்ற இருவரது குடும்பங்களுக்கு தலா ரூ. 1.50 லட்சமும் இழப்பீடாக கிடைக்கும்.
இதற்கிடையே, விபத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications