மேட்டூர் அணையில் குதித்து 4 பேர் தற்கொலை
மேட்டூர்:மேட்டூர் அணையிலிருந்து குதித்து, லாரி அதிபர் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். ரிக் லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு கலைச்செல்வன் என்ற 11 வயது மகனும், மதுஸ்ரீ எனற 6 வயது மகளும் உள்ளனர்.
2 நாட்களுக்கு முன்பு குடும்பத்தோடு மோட்டார் சைக்கிளில் மேட்டூர் அணைக்கு வந்தார் சங்கர். பின்னர் குளிர்பானத்தில் அனைவரும் எலி விஷத்தை கலந்து சாப்பிடுள்ளனர்.
பின்னர் அணையிலிருந்து ஆழமான பகுதியில் குதித்து நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டனர்.
நேற்று அவர்களின் உடல்கள் மிதக்க ஆரம்பித்தன. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து நான்கு உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் சங்கர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கண்டுபிடித்தனர். அதில், ரிக் தொழிலில் எனது நண்பர் ரூ. 10 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டார்.
இதையடுத்து நான் எனது மாமியாரின் உதவியுடன் புதிதாக ஒரு ரிக் வண்டி வாங்கினேன். ஆனால் அதையும் இயக்க விடாமல் எனது நண்பர் இடையூறு செய்து வந்தார், தினசரி மிரட்டியும் வந்தார்.
அவரது தொல்லை தாங்க முடியாமல்தான் நாங்கள் தற்கொலை செய்து கொண்டோம். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் என எழுதியுள்ளார் சங்கர்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications