வீடுகளில் புகுந்து சிலிண்டர் திருடிய 3 பேரைமரத்தில் கட்டி வைத்து வெளுத்த பொதுமக்கள்
பல்லடம்:கோவை மாவட்டம் பல்லடம் அருகே வீடுகளில் புகுந்து காஸ் சிலிண்டர்களைத் திருடிய 3 பேர் கும்பலை பொதுமக்கள் சுற்றி வளைத்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
பல்லடம் அருகே உள்ள பல கிராமங்களில் வீடுகளில் காஸ் சிலிண்டர்கள் அடிக்கடி திருடு போய் வந்தன. இதுதொடர்பாக போலீஸில் புகார்கள் குவிந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு சிற்றம்பலம் என்ற கிராமத்தில் 3 பேர் ஒரு வீட்டில் புகுந்து காஸ் சிலிண்டரைத் திருடுவதை சிலர் பார்த்து விட்டனர். உடனியாக ஊரைக் கூட்டிய அவர்கள் சிலிண்டர் திருடர்களை வளைத்துப் பிடித்தனர்.
பின்னர் அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் இன்று காலை போலீஸாரிடம் அவர்களை ஒப்படைத்தனர். 3 பேரும் பொங்கலூரைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களுடன் மேலும் 4 பேர் உள்ளனராம்.
இந்தக் கும்பல் பல்லடம் சுற்றுப் பகுதிகளில் கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட சிலிண்டர்களைத் திருடி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு அவற்றை விற்று வந்துள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications