மதுரை மேற்கு பெருமளவில் போலி வாக்காளர்கள்தேர்தல் ஆணையம் டென்ஷன்-சரி பார்க்க உத்தரவு
சென்னை:இடைத் தேர்தலுக்காக காத்திருக்கும் மதுரை மேற்கு தொகுதியில் பெருமளவில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வாக்காளர் பட்டியலை மீண்டும் சரி பார்த்து போலிகளை நீக்க உத்தரவிட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.
மதுரை மேற்குத் தொகுதியில் இடைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னோட்ட நடவடிக்கையாக அங்கு வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது.
புதிதாக வாக்காளர்கள் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் 15 ஆயிரம் புதிய விண்ணப்பங்கள் வந்தன. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருப்பதைப் பார்த்து குழம்பிய தேர்தல் ஆணையம் அந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்தது.
அப்போதுதான் அவை அனைத்துமே போலியானவை என்பது தெரிய வந்தது. மேலும், இதில் உள்ளவர்கள் தங்களது முந்தைய முகவரிகளை அளிக்கவில்லை. எனவே இந்த 15 ஆயிரம் பேரும் வேறு பெயர்களில் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து பெருமளவில் சேர்க்கப்பட்டுள்ள இந்த போலி வாக்காளர்களைக் கண்டறிந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications