நீதிமன்றம் கட்ட நிலம் தந்தவரை அலைகழித்தஅரசு-வட்டியுடன் நிவாரணம் தர உத்தரவு
சென்னை:மதுரை உயர்நீதிமன்றக் கிளை அமைப்பதற்கு நிலம் கொடுத்தவருக்கு அவருக்கான நிவாரணத் தொகையுடன் வட்டியும் சேர்த்து ரூ. 36.59 லட்சம் நிவராணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை உலகநேரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமைந்துள்ளது. இது அமைந்துள்ள நிலம் மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த சம்சுதீன் என்பவருக்குச் சொந்தமானதாகும்.
உயர்நீதிமன்றக் கிளை கட்டடம் கட்டுவதற்காக சம்சுதினுக்குச் சொந்தமான நிலத்தில் 3 ஹெக்டேர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. ஆனால் அதற்குரிய விலையை சம்சுதினுக்கு அரசு கொடுக்கவில்லை. இதனால் அவர் மதுரை விரைவு நீதிமன்றத்தை கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் அணுகினார்.
அதை விசாரித்த நீதிமன்றம், சம்சுதினுக்கு வழங்கப்பட்ட நிலத்துக்கான விலையை அதிகரித்து உத்தரவிட்டது. ஆனால் அந்தத் தொகையை அரசு வழங்கவில்லை.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்சுதீன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்சுதீனுக்கு வழங்க வேண்டிய தொகையுடன் வட்டியையும் சேர்த்து ரூ. 36.59 லட்சம் பணத்தை அரசு 3 மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications