வங்கதேசத்தை வீழ்த்தி மே.இ தீவுகள் ஆறுதல் வெற்றி
பிரிட்ஜ்டவுன்:
உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேறியுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி, நேற்று நடந்த சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை 99 ரன்களில் வீழ்த்தியது.
உலகக் கோப்பைப் போட்டியின் லீக் பிரிவில் சிறப்பாக ஆடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி சூப்பர் எட்டு சுற்றில் படு சொதப்பலாக ஆடி போட்டியிலிருந்தே வெளியேறி விட்டது.
இதுவரை மோதிய போட்டிகளில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தோல்வியுற்றிருந்தது. ஒரு வெற்றியைக் கூட அது பெறவில்லை. இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஆரம்பம் மோசமாக இருந்தது. கெய்லும், ஸ்மித்தும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் விரக்தி அடைந்தனர்.
ஆனால் சந்தர்பாலும், சாமுவேல்ஸும் இணைந்து அணியை நிலைப்படுத்தினர். சந்தர்பால் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். சாமுவேல்ஸ் 31 ரன்களை எடுத்தார்.
ஆனால் பின்னர் வந்த ராம்நரேஷ் சர்வான்தான் அணியின் ஸ்கோரை உயர்த்த வெகுவாக உதவினார். சிறப்பாக ஆடிய அவர் ஆட்டமிழக்காமல் 91 ரன்களைக் குவித்தார்.
கேப்டன் பிரையன் லாராவும் சிறப்பாக ஆடி 33 ரன்களை சேர்த்தார். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 5விக்கெட்டுக்களை இழந்து 230 ரன்களை சேர்த்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
பின்னர் களம் இறங்கிய வங்கதேசம், மேற்கு இந்திய அணியின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சுருண்டு போனது.
முஷாபிகூர் ரஹீம் (38), மொர்டசா (37) ஆகியோர் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து வங்கதேசம் 131 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்த போட்டியால் இரு அணிகளுக்கும் எந்த பலனும் இல்லை என்ற போதிலும், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்தது. இன்னும் இங்கிலாந்துடன் மட்டும் மேற்கு இந்தியத் தீவுகள் மோத வேண்டியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications