டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் லாரா ஓய்வு
பிரிட்ஜ்டவுன்:ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பிரையன் லாரா, டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி உலகக் கோப்பைபையில் படு மோசமான முறையில் வெளிேயறியுள்ளது. இதனால் கேப்டன் லாரா மீது மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்ெகட் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இந்த நிைலயில் சமீபத்தில் ஒரு நாள் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் லாரா. உலகக் கோப்பையுடன் ஒரு நாள் போட்டிக்கு விடை கொடுப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில், தற்போது டெஸ்ட் கிரிக்ெகட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக லாரா அறிவித்துள்ளார்.
நேற்று வங்கதேசத்துடன் நடந்த ேபாட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் லாரா. அப்ேபாதுதான் இந்த முடிவை அவர் அறிவித்தார். செய்தியாளர்களிடம் லாரா பேசுகையில், இங்கிலாந்துடன் நடக்கும் கடைசி ஒரு நாள் போட்டிதான் எனது கிரிக்கெட் வாழ்வின் கடைசிப் போட்டியும்ஆகும்.
ெடஸ்ட் போட்டிகளிலிருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். இங்கிலாந்து செல்லும் மேற்கு இந்திய அணியில் நான் இடம்பெற மாட்ேடன்.
எனது எதிர்காலம் குறித்து இப்ேபாது எதுவும் ெசால்ல விரும்பவில்லை. எனக்கு அணித் தேர்வுக்குழு, அணி நிர்வாகம் மற்றும் கிரிக்ெகட் வாரிய அதிகாரிகளிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை. ஊக்கம் கிடைக்கவில்லை.
ஆனால் எனக்குப் பின் கேப்டனாக வருபவருக்காவது இந்த ஆதரவு கிைடத்தால்தான் மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்ெகட்டுக்கு அது நன்மை பயப்பதாக அமையும்.
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்க திறமை மட்டும் போதாது. நல்ல அடிப்படையும், ஆதரவும் தேைவ. மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்களிடம் நல்ல திறமை உள்ளது. ஆனால் போதுமான அடிப்படையும், ஆதரவும் இல்லை. இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் கவனத்தில் ெகாள்ள வேண்டும்.
உலகக் கோப்பைப் போட்டியில் 300வது ஒரு நாள் போட்டியை விளையாட வேண்டும் என நிைனத்தேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. இங்கிலாந்துடன் நான் விளையாடும் போட்டி 299வது ஒரு நாள் போட்டி.
கடந்த 17 வருடங்களாக கிரிக்கெட்டில் இருந்து வருகிறேன்.131 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ேளன். பிரையன் லாரா என்ற வீரர் இருந்தார் என்று ரசிகர்கள் எதிர்காலத்தில் என்னைப் பற்றி சந்ேதாஷமாக நினைத்துப் பார்க்க விரும்புகிறேன் என்றார் லாரா.
38 வயதாகும் லாரா உலக கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். அதிரடி பேட்ஸ்மெனான லாரா சமீப காலமாக சரியான பார்மில் இல்லை. மேலும் பல்வேறு நெருக்குதல்களும், அணியில் சில வீர்ரகளிடமிருந்து சரியான ஒத்துைழப்பு கிைடக்காமலும் அவதிப்பட்டு வந்தார்.
உலகக் ேகாப்பைப் போட்டி தோல்வியைத் தொடர்ந்து வருகிற இங்கிலாந்து டூரில் அவர் இடம் பெற மாட்டார், கேப்டன் பதவியிலிருந்து அவரை நீக்க கிரிக்ெகட் வாரியம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்பாகவே டெஸ்ட் ஓய்வையும் அறிவித்து ரசிகர்களுக்து அதிர்ச்சி அளித்து விட்டார் லாரா.
மிகச் சிறந்த வீரரான லாரா, 34 சதங்களை டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ளார். ஒரே இன்னிங்சில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையும் லாராவிடமே உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 400 ரன்களை எடுத்ததே லாராவின் உலக சாதனை. அதேபோல முதல் தர போட்டிகளில் ஒரே இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 501 ரன்களைக் குவித்தும் சாதனை படைத்துள்ளார் லாரா.
ரன் மெஷின் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் லாரா 1995ம் ஆண்டு விஸ்டன் சிறந்த கிரிக்ெகட் வீரராக தேர்ந்ெதடுக்ப்பட்டவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications