ஜெயா டிவியை முடக்க முயன்றால்...சு.சுவாமி
சென்னை:ஜெயா டிவியை முடக்க முயலும் நடவடிக்கையை திமுக கைவிடாவிட்டால், திமுகவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பிரசார இயக்கம் நடத்தப்படும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜெயா டிவியை முடக்கி, அதை சன் டிவியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதை கைப்பற்றும் முயற்சியில் மறைமுக சதி வேலையில் திமுக ஈடுபட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியிருப்பது உண்மையானதே.
மத்தியில் ஐக்கிய முற்ேபாக்குக் கூட்டணி ஆட்சி வந்ததிலிருந்தே சட்டவிரோத சன் டிவி ஆதிக்கவாதிகள், கேபிள் டிவி ஆபரேட்டர்களை மிரட்டியும், விளம்பரதாரர்களை வளைத்தும் போட்டி சேனல்களை ஒடுக்கி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் கருத்தை வெளிபப்டுத்தும் ஒரே தொைலக்காட்சி ஜெயா டிவி மட்டுமே. அதன் பங்குதாரருக்கு பிரச்சினை கொடுப்பது என்பது ஜெயா டிவி மீதான மறைமுகத் தாக்குதல் ஆகும்.
இதை பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான நேரடி தாக்குதலாகவே அனைத்து ஜனநாயக சக்திகளும் கருத வேண்டும். இந்த நடவடிக்கைகளை திமுக தொடர்ந்தால், அதன் சதி வேலைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் நாடு தழுவிய பிரசார இயக்கம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் சுவாமி.
இதற்கிடையே, ஜெயா டிவியை முடக்க திமுக சதி செய்வதாக ஜெயலலிதா அளித்த பேட்டியை துண்டுப் பிரசுரங்களாக அச்சடித்து அதிமுகவினர் விநிேயாகித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் போஸ்டர்களும் அடித்து ஒட்டி வருகின்றனர்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications