பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
பாலசோர்(ஒரிசா):ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தயாரித்துள்ள அதி நவீன பிரமோஸ் ஏவகணை இன்று காலை ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஏவுகணை ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.
இந்தியாவும், ரஷியாவும் இணைந்து தயாரித்துள்ள அதி நவீன ஏவுகணை பிரமோஸ். ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை 290 கிலோமீட்டர் தூரத்திற்குப் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் தன்மை கொண்டது.
200 கிலோ எடை கொண்ட குண்டுகளை சுமந்து செல்லக் கூடிய வகையில், இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சந்திப்பூரில் உள்ள ஏவுதளத்திலிருந்து முற்பகல் 11.20 மணிக்கு பிரமோஸ் வெற்றிகரமாக ஏவப்பட்டது. குறிப்பிட்ட இலக்கை அது சரியாகத் தாக்கி அழித்தது.
இந்த சோதனை வெற்றிகரமாக இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தரையிலிருந்து ஏவப்படக் கூடிய பிரமோஸ் ஏவுகணைகளை சிறிய மாற்றத்துடன் கப்பல்களிலிருந்தும், நீர்மூழ்கி கப்பல்களிலிருந்தும் ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கப்பலிலிருந்து பிரமோஸை செலுத்தும்போது அது ஒலியை விட இரு மடங்கு வேகத்துடன் செல்லும்.
கடைசியாக கடந்த பிப்ரவரி 4ம் தேதி பிரமோஸ் ஏவி சோதிக்கப்பட்டது. தற்போது நடந்திருப்பது 10வது சோதனை ஆகும்.
முழுமையான பரிசோதனைகளுக்குப் பின்னர் இந்தியா மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளின் ராணுவத்திலும் பிரமோஸ் சேர்க்கப்படவுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications