பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுக்க தடை
சென்னை:சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவர் ரவி சுப்ரமணியத்தை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.பி.பிரேம்குமார் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் கூலிப்படைத் தலைவன் அப்புவை ஜெயேந்திரருக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாக கைது செய்யப்பட்டு பின்னர் அப்ரூவராக மாறியவர் ரவிசுப்ரமணியம்.
இவர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, அவரை பிரேம்குமார் சந்தித்து தப்பி ஓடும் படியும், இல்லாவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் என மிரட்டியதாகவும் ரவிசுப்ரமணியம் கொடுத்த புகாரின் பேரில் பிரேம்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார் பிரேம்குமார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பிரேம்குமார். அதில், இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே இவற்றை தடயவியல் சோதனைக்கு அனுப்ப வேண்டும். அதுவரை தன் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார், ஜூன் 5ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார். மேலும் அதுவரை பிரேம்குமார் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்தார்.
ஏற்கனவே மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த நல்லகாமன் என்ற முன்னாள் ராணுவ வீரரை தெருவில் சங்கிலி கட்டி இழுத்துச் சென்று அடித்து உதைத்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்குமாருக்கு, ஏன் உங்களை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என்று கேட்டு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பது நினைவிருக்கலாம்.
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications