Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷிய முன்னாள் அதிபர் எல்ட்சின் மரணம்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோரஷிய முன்னாள் அதிபர் போரிஸ் எல்ட்சின் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

சோவியத் யூனியன் உடைந்து, ரஷியா தனி நாடாக மாறியபோது அதன் முதல் அதிபராக பதவியேற்றவர் எல்ட்சின். உண்மையில் எல்ட்சினின் புரட்சியால்தான் கார்ப்பசேவ் தலைமையிலான சோவியத் யூனியன் உடைந்து சிதறியது.

சோவியத் யூனியன் உடைந்த பின்னர் 1991ம் ஆண்டு ரஷிய அதிபராக பதவியேற்றார் எல்ட்சின். பின்னர் 1996ல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று அதிபரானார்.

Boris Yeltsin

ரஷியாவை கம்யூனிச பிடியிலிருந்து விடுவிக்க பல்வேறு தலைவர்களும், கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக முயன்று தோல்வியுற்றதை, மூன்றே ஆண்டுகளில் நடத்தி முடித்து சாதனை படைத்தவர் எல்ட்சின்.

கம்யூனிஸ்டுகளை கடுமையாக எதிர்த்து வந்தவர் எல்ட்சின். ஆனால் ஆரம்பத்தில் ஒரு கம்யூனிஸவாதியாகத்தான் இருந்தார். தொண்டராகத்தான் இருந்தது. 1976 முதல் 1985 வரை யூரல் பகுதி கம்யூனிஸ்ட் பிரதிநிதியாக இருந்து வந்தார்.

பின்னர் 1986ம் ஆண்டு பொலிட்பீரோ குழு உறுப்பினர் ஆனார் எல்ட்சின். பிறகு மாஸ்கோ நகர கம்யூனிஸ்ட் தலைவராகவும் உயர்ந்தார்.

இந்த கால கட்டத்தில்தான் கார்ப்பசேவ் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆனார். அவர் அதிபர் பதவிக்கு வந்தபோது ரஷியாவின் பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்தது. இதை தூக்கி நிறுத்த, பிராஸ்த்ரோய்க்கா, கிளாஸ்நாஸ்ட் என இரு திட்டங்களைக் கொண்டு வந்தார் கார்ப்பசேவ்.

அவற்றை எல்ட்சின் தீவிரமாக ஆதரித்தார். ஊழல் வாதிகளை பகிரங்கமாக விமர்சித்தார். கார்ப்பசேவ் தயங்கித் தயங்கி சீர்திருத்தங்களை கொண்டு வர முயன்றார். ஆனால், எல்ட்சினோ படு தீவிரமாக இருந்தார். மிக வேகமாக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கார்ப்பசேவை அவர் வற்புறுத்தி வந்தார்.

இந்த நிலையில்தான் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சம்பவம் 1990ம் ஆண்டு நடந்தது. அந்த ஆண்டு மே 29ம் தேதி ரஷியக் குடியரசுக்கு நடந்த தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எல்ட்சின்.

அந்த சமயத்தில், லிதுவேனியா, லாட்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகள் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்தன. அந்த வரிசையில் ரஷியாவும் சேர்ந்தது. இதன் மூலம் சோவியத் யூனியன் உடைந்து சிதறியது. ரஷியாவைத் தொடர்ந்து மேலும் பல நாடுகளும் தனியாக பிரிந்து போயின.

1990ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி சோவியத் யூனியனிலிருந்து ரஷியா தனி சுதந்திர நாடாக உருவானது. 1991 ஜூலை 10ம் தேதி நடந்த தேர்தலில் சுதந்திர ரஷியாவின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எல்ட்சின்.

சரிந்த பொருளாதாரம், அதிருப்தியாளர்ளின் போக்கு உள்ளிட்டவற்றை சமாளித்து இரு முறை அதிபராக இருந்த எல்ட்சின் தனக்குப் பின்னர் விலாடிமிர் புடினை அதிபராக்க முன்வந்தார். இதையடுத்து 2000மாவது ஆண்டில் எல்ட்சின் பதவி விலகிக் கொள்ள புடின் அதிபரானார்.

நீண்ட காலமாகவே அவருக்கு இருதயக் கோளாறு இருந்து வந்தது. இதுவே இப்போது அவரது மரணத்துக்குக் காரணமாகி விட்டது. எல்ட்சின் உடல் மாஸ்கோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+