இந்தியில் பேசுவதா? ஜெ.வுக்கு செஞ்சி கண்டனம்
சென்னை:அண்ணாவின் பெயரில் உள்ள கட்சியின் தலைவராக இருந்து கொண்டு இந்தியில் பேசியதை பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஜெயலலிதாவுக்கு போட்டி மதிமுக பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பெரியாரின் எண்ணத்திற்கு விரோதமாக, அண்ணாவின் பெயரை கட்சிக்கு வைத்துக் கொண்டு, அண்ணாவின் கொள்கைக்கு துரோகமாக, தமிழ் காக்க உயிர் நீத்த எண்ணற்ற தியாகிளுக்குக் களங்கமாக, ஜெயலலிதா உத்தரப் பிரதேச தேர்தல் பிரசாரத்தில் இந்தியில் பேசியுள்ளார்.
இது தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கு அவர் இழைத்த துரோகமாகும். இந்தி ஆதிக்கத்தை விரட்டி அடித்த தமிழ்நாட்டிலிருந்து உ.பிக்குப் போய் இந்தியில் பேச காரணம் என்ன? ஆங்கிலத்தில் பேசி இந்தியில் மொழி பெயர்த்தால் ஒத்துக் கொள்ள மாட்டார்களா? அல்லது தமிழில் பேசி இந்தியில் மொழி பெயர்த்தால் ஒத்துக் கொள்ள மாட்டார்களா?
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு விரோதமாக ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக செயல்படும் ஜெயலலிதா, இந்தியில் பேசியது கடும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் செஞ்சி.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications