கம்ப்யூட்டர் உதிரிபாக குடோனில் தீ விபத்து
சென்னை: கம்ப்யூட்டர் உதிரிபாக குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 5 லட்சம் பெறுமானமுள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
அண்ணாசாலையிலுள்ள ரிச்சி சாலையில் 2 மாடி கட்டிடத்தில் கம்யூட்டர் குடோன் உள்ளது. இதில் நேற்றிரவு புகை வந்ததையடுத்து போலீஸ் மற்றும் காவலாளி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே தீயணைப்பு துணை இயக்குனர் மதுரபாண்டியன் தலைமையில் 13 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். இவர்கள் வருவதற்குள் குடோனில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. குடோன் ஷட்டர் இறுகியதால் திறக்கமுடியவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் ஷட்டரை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர்.
ஆனால் குடோன் முழுவதும் புகைமண்டலமாக இருந்ததால் உள்ளே செல்லமுடியவில்லை. அதனால் நவீன கருவி மூலம் புகை வெளியேற்றப்பட்டது. பின்னர் வீரர்கள் கவச உடைகள் அணிந்து குடோன் உள்ளே சென்று தீயை அணைத்தனர். 4 மணிநேரம் போராடி இந்த தீயை அணைத்தனர். அருகிலுள்ள கடைகளும் தீப்பிடிக்காமல் காப்பாற்றினர்.
இந்த தீவிபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் எரிந்து சாம்பலாயின. இரவு நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் துணை கமிஷ்னர் ராமசுப்ரமணி உத்தரவின் பேரில் சிந்தாதிரிபேட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த தீவிபத்து மின்சார கோளாறு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்ற போதிலும் நாசவேலை காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications