4 தொகுதிகளில் போட்டி-ஜெ.வுக்கு நோட்டீஸ்
சென்னை: சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சென்ைன உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா புவனகிரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ஆண்டிப்பட்டி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட மனுதாக்கல் செய்தார்.
ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 தொகுதிக்கு மேல் போட்டியிட முடியாது என்பதால் அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்ததை எதிர்த்து திமுக எம்.பி. செ.குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. தற்போது இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தன்னையும் ஒரு பிரிதிவாதியாக சேர்க்க வேண்டும் என ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். அவரை இந்த வழக்கில் சேர்க்க கூடாது என குப்புசாமியும் ஒரு மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் தர்மராவ், பழனிவேல் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை ஏற்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக நாளைக்குள் தனது பதில் மனுவை ஜெயலலிதா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications