ஜெயா டிவிக்கு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்?
திருநெல்வேலி:ஜெயா டிவி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும், ஜெயா டிவிக்கும் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதேபோல மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், மதுரை சித்திரைத் திருவிழா ஆகியவற்றிலும் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என மிரட்டல் கடிதங்கள் வந்தன.
இவை அனைத்தையும் ஒரே நபரே அனுப்பியிருப்பதாக போலீஸார் சந்தேகித்தனர். ஜெயா டிவிக்கு வந்த, மிரட்டல் கடிதத்தில் வெங்கடேசன், என்.ஜி.ஆ. நியூ காலனி, பாளையங்கோட்டை, நெல்லை என்ற முகவரி இருந்தது.
இதையடுத்து நெல்லை போலீஸ், புலனாய்வுப் பிரிவு, கியூ பிரிவு போலீஸார் அந்த முகவரிக்கு விரைந்தனர். ஆனால் வீடு பூட்டிக் கிடந்தது. ஆனால் அந்த முகவரியில் வெங்கடேசன் என்பவர் வசிப்பதை அக்கம் பக்கத்து வீடுகளில் கேட்டு உறுதி செய்து கொண்டனர் போலீஸார்.
அவர் எங்கு போயுள்ளார் என்பதை அறிய போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வெங்கடேசன் சிக்கினார். வெங்கடேசன் ஏற்கனவே இன்டர்நெட் மையம் வைத்து நடத்தி வந்துள்ளார்.
அவர்தான் வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பினாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அனேகமாக அவர்தான் மிரட்டல் கடிதங்களை அனுப்பியிருக்க வேண்டும் என போலீஸார் நம்புகின்றனர்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications