ஒரு ஏட்டு-ரெண்டு பொண்டாட்டி: போலீஸ் குடியிருப்பில் அடிதடி
சென்னை:தலைமைக் காவலரின் இரு மனைவிகளும் போலீஸ் குடியிருப்பில் கட்டிப்புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு மனைவி, அவரது மகள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் மாசிலாமணி. இவருக்கு சரஸ்வதி(38), சாந்தி(35) என இரு மனைவிகள்.
சரஸ்வதியை மகன், மகளுடன் மண்ணடி போலீஸ் குடியிருப்பில் குடி வைத்திருந்தார். சாந்தியை மகன், மகளுடன் குரோம்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடி வைத்திருந்தார்.
தனது கணவருக்கு சரஸ்வதி என்ற இன்னொரு மனைவி இருப்பது நீண்ட காலமாக சாந்திக்குத் தெரியாதாம். சமீபத்தில்தான் அது தெரிய வந்தது. இதையடுத்து சரஸ்வதியின் வீடு தேடி வந்து தகராறு செய்துள்ளார் சாந்தி.
இந்த சண்டையால் போலீஸ் குடியிருப்பே நாறிப் போனதாம். இதையடுத்து சரஸ்வதியை வீட்டைக் காலி செய்யும்படி உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், சரஸ்வதி ஊருக்குச் சென்றிருந்தார். அப்போது மாசிலாமணி, சரஸ்வதியின் வீட்டைக் காலி செய்து விட்டு பொருட்களை சாந்தி வீட்டில் கொண்டு வந்து போட்டுள்ளார்.
ஊருக்குத் திரும்பிய சரஸ்வதி வீடு காலி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ந்தார். குரோம்பேட்டைக்கு வந்த சரஸ்வதி, அங்கு சாந்தியுடன் சண்டையில் குதித்தார்.
இருவரும் கட்டிப் புரண்டு போலீஸ் குடியிருப்பில் பலமாக சண்டை போட்டுள்ளனர். இதனால் போலீஸ் குடியிருப்பே அங்கு திரண்டு விட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், சரஸ்வதி, அவரது மகள் திவ்யா, சரஸ்வதியின் தங்கை பரமேஸ்வரி, ஆட்டோ டிரைவர் பிரபு ஆகியோரைக் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications