6 மணி நேரத்தில் கொள்ளையர்களைஅமுக்கிய போலீஸ்-ரூ. 25 லட்சம் நகை மீட்பு
சென்னை: சென்னை எழும்பூரில் தனியாக இருந்த 60 வயது பெண்மணியை கத்தி முனையில் மிரட்டி ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த மூன்று பேரை 6 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்து நகைகளை மீட்டனர்.
சென்னை எழும்பூரில் மாயா என்ற 60 வயது பெண்மணி வீட்டில் வேலைகாரி பெண்ணுடன் தனியாக இருந்தார். அப்போது தீபக், சரோஜ் மற்றும் சுதீஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் வீட்டினுள் நுழைந்து மாயாவின் கைகளை துணியால் கட்டினர்.
![]() |
பின்னர் அவரிடமிருந்த சாவியை பறித்து அலமாரியிலிருந்த ரூ.25 லட்சம் பெறுமானமுள்ள நகைகளை எடுத்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து மாயாவின் கணவர் சிரானி போலீஸில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து அந்த 3 பேரையும் தேடினர்.
போலீஸ் விசாரணையில், திருடர்கள் மூவரும் அம்பத்தூரில் ஒரு தொழிற்சாலையில் பதுங்கியிருப்பதை கண்டறிந்தனர். பின்னர் விரைந்து சென்று மூன்று பேரையும் அமுக்கினர். கொள்ளை நடந்த ஆறே மணி நேரத்தில் திருடர்கள் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன. இந்த நகைகளுடன் சொந்த ஊரான பீகாருக்கு இன்றிரவு ரயிலில் செல்ல மூன்று பேரும் திட்டமிட்டிருந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்













Click it and Unblock the Notifications