சுருண்டது தெ.ஆப்ரிக்கா-இறுதியில் ஆஸ்திரேலியா
செயின்ட் லூசியா:2வது அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியா அபாரமாக வெற்றி பெற்று தொடர்ந்து நான்காவது முறையாக உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது.
முதல் அரை இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டது. இந்த நிலையில், 2வது அரை இறுதிப் போட்டி நேற்று நடந்தது.
![]() |
வலுவான ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்கவும் இப்போட்டியில் மோதின. முதலில் தென் ஆப்பிரிக்கா பேட் செய்தது. ஆனால் வலுவான ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மடமடவென்று விக்கெட்டுகள் சரிந்தன.
ஒரு கட்டத்தில்100 ரன்களையாவது தென் ஆப்பிரிக்கா எட்டுமா என்ற சந்தேகம் வந்து விட்டது. அந்த அளவுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர் தென் ஆப்பிரிக்க வீரரர்கள்.
மெக்கிராத், ஷான் டெய்ட் ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க கடுமையாக திணறினர். கேப்டன் ஸ்மித் (2), டிவில்லியர்ஸ் (15), கல்லிஸ் (5) ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.
![]() |
ஆனால் கிப்ஸ் மிகப் பொறுப்பாகவும், பொறுமையாகவும் ஆடி அணியின் சரிவை சற்று நேரம் நிறுத்தினார். மிக மிக நிதானமாக ஆடிய அவர் 39 ரன்கள் எடுத்த நிலையில் டெய்ட்டின் பந்து வீழ்ந்தார்.
மறு முனையில் ஜஸ்டின் கெம்ப் சிறப்பாக ஆடி 49 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற யாரும் சொல்லிக் கொள்ளும்படி ஆடவில்லை.
டெய்ட், மெக்கிராத்தின் அணல் வேகப் பந்துவீச்சில் தடுமாறி ஆடிய தென் ஆப்பிரிக்கா 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 149 ரன்களில் சுருண்டது.
![]() |
மெக்கிராத் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெய்ட்டுக்கு 4 விக்கெட்டுகள் கிடைத்தன.
மிக மிக எளிதான ஸ்கோர் என்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆட்டத்தை ரிலாக்ஸ்டாக தொடங்கினர். கில்கிறைஸ்ட் 1 ரன்னில் வீழ்ந்து வெளியேறினாலும், மாத்யூ ஹைடனும், மைக்கேல் கிளார்க்கும் அபாரமாக ஆடி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
ஹைடன் 41 ரன்கள் எடுத்தார். கிளார்க் ஆட்டமிழக்காமல் 60 ரன்களைக் குவித்தார். கேப்டன் பான்டிங் 22 ரன்கள் சேர்த்தார். 31.3 ஓவர்ளிலேயே ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 4வது உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்த வெற்றி உலகக் கோப்பைப் போட்டிகளில் தொடர்ச்சியாக கிடைத்துள்ள 22வது வெற்றி ஆகும்.
சனிக்கிழைம நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவும், இலங்கையும் சந்திக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் அவர்களுக்கு அது ஹாட்ரிக் வெற்றியாகும். இலங்கை வென்றால் 2வது கோப்பையை அவர்கள் பெறுவர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!















Click it and Unblock the Notifications