காவிரி-60 டிஎம்சி கோரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு மனு
டெல்லி:தமிழகத்திற்கு காவிரியில் கூடுதலாக நீர் தரக் கோரியும், இறுதித் தீர்ப்பில் உள்ள தமிழகத்திற்குப் பாதகமான அம்சங்களை நீக்கக் கோரியும் காவிரி-60 டிஎம்சி கோரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்ய அரசு முடிவெடுத்தது. மேலும், தீர்ப்பில் தமிழகத்திற்குப் பாதகமாக உள்ள அம்சங்கள் குறித்து விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று நடுவர் மன்றத்தில் தமிழக அரசின் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
தமிழகத்தில் நடந்து வரும் சம்பா, குறுவை, தாளடி ஆகிய மூன்று போக விவசாயத்தை நிறுத்திக் கொண்டு, தண்ணீரை நம்பி இல்லாத பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என நடுவர் மன்றம் கூறியிருப்பது ஏற்புக்குரியதல்ல.
மூன்று போக சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை கருத்தில் கொண்டு கர்நாடகம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் நீர்த் தேவைக்கேற்ப கூடுதலாக 60 டிஎம்சி நீரை விடுவிக்க உத்தரவிட வேண்டும்.
9ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வரும் சேத்தியா அணைக்கட்டு தொடர்ந்து நீடிக்க அனுமதிக்க வேண்டும்.
கர்நாடகத்தின் ஹேமாவதி அணை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குத் தேவையான அளவை விட கூடுதலாக வழங்கப்பட்டுள்ள நீரைக் குறைக்க வேண்டும்.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிர்வாக வாரிய அமைப்புக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும்.
பன் மாநில நதி நீர் தாவா சட்டம் 1956, பிரிவு 5(3)ன் கீழ் விளக்கம் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications