விடுதலைப் புலிகளின் டிவி, ரேடியோ முடக்கம்
கொழும்பு:விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலி, ஒளி பரப்பை அமெரிக்காவின் இன்டல்சாட் செயற்கைக்கோள் நிறுவனம் முடக்கிவிட்டது.
படை பலத்துடன் திகழும் விடுதலைப் புலிகள் தங்களுக்கென வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பையும் வைத்துள்ளனர். இவற்றின் மூலம் ஈழம் குறித்த செய்திகளையும், போர் குறித்த செய்திகளையும் ஒலி, ஒளிபரப்பி வந்தனர்.
ஆண்டுதோறும் மாவீரர் தினத்தின்போது பிரபாகரன் உரையாற்றுவதை நேரடியாகவும் ஒலி, ஒளிபரப்பி வந்தனர்.
அமெரிக்காவின் இன்டல்சாட் செயற்கைக்கோள் நிறுவனத்தின் செயற்கைக்கோள் மூலமாக இந்த ஒளி, ஒலிபரப்பு நடந்து வந்தது. இவற்றை முடக்க வேண்டும் என இலங்கை அரசு அமெரிக்க அரசைக் கோரி வந்தது.
அதை ஏற்று தடை செயய்ப்பட்ட அமைப்பாக புலிகள் இயக்கம் உள்ளதால், இன்டல்சாட் செயற்கைக்கோளை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று அமெரிக்க அரசு எச்சரித்தது.
இதையடுத்து இன்டல்சாட் செயற்கைக்கோளிலிருந்து சிக்னல் வழங்குவதை அந்த நிறுவனம் நிறுத்தி விட்டது.
இதனால், புலிகளின் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
-
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications