ஜெ.வின் 3வது அணி உருவாகாது: காங்கிரஸ்
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முயற்சித்து வரும் 3 வது அணிக்கான முயற்சிகள் வெற்றி பெறாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் மார்கெரட் ஆல்வா கூறியுள்ளார்.
சென்னை வந்த ஆல்வா இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தேசிய அளவில் புதிதாக 3வது அணியை உருவாக்க ஜெயலலிதாவும், இன்னும் சில தலைவர்களும் முயற்சிக்கிறார்கள். ஆனால் இது பலிக்காது, வெற்றி பெறாது.
அரசியல் கணக்கின்படி, 3வது அணி அமைப்பதற்குப் போதுமான கட்சிகள் அங்கு இல்லை.
உ.பி. சட்டசபைத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிலையாக, வலுவாக உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உள்ள அரசிலிருந்து பிரிந்து போகும் எண்ணம் எந்தத் தோழமைக் கட்சிக்கும் இல்லை.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளை அந்த மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினையின் விளைவாகததான் பார்க்க வேண்டும்.
அரசியலில் கோஷ்டி மோதல்கள் நடப்பது புதியதல்ல. அனைத்துக் கட்சிகளிலும் உள்ளது போலவே தமிழக காங்கிரஸ் கட்சியிலும் சில பிரிவுகள் உள்ளன. இருப்பினும் இதனால் கட்சியின் வளர்ச்சிக்கு எந்தப் பாதகமும் இல்லை.
மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள் உள்ளன. இருந்தாலும் கட்சி வளர்ச்சி என்று வரும்போது அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுகிறார்கள்.
திமுக அரசில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் தர வேண்டும் என்று காங்கிரஸார் கோருவதில் எந்தத் தவறும் இல்லை. மத்தியில் காங்கிரஸ் அமைச்சரவையில் திமுகவுக்கு இடம் தரப்பட்டுள்ளது. அதுபோல இங்கு காங்கிரஸுக்கு இடம் தர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதில் என்ன தவறு உள்ளது.
கோவா, மகாராஷ்டிராவில் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு தந்துள்ளது காங்கிரஸ். கோவாவில் தேசியவாதக் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியை தந்துள்ளோம். மகாராஷ்டிராவில் சில முக்கிய இலாகாக்கள் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸுக்குத் தரப்பட்டுள்ளது என்றார் ஆல்வா.
முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் சென்ற ஆல்வா அங்கு ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications