கலாமுக்கு மீண்டும் பதவி-மார்க்சிஸ்ட் எதிர்ப்புசாட்டர்ஜியை ஜனாதிபதியாக்க திட்டம்
டெல்லிகுடியரசுத் தலைவர் பதவிக்கு மீண்டும் அப்துல் கலாமை நிறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அப்துல் கலாமையை மீண்டும் குடியரசுத் தலைவராக்க பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.
பெரும்பாலான எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் கலாமையே மீண்டும் குடியரசுத் தலைவராக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்தது.
பல முக்கிய அரசியல் கட்சிகளும் கூட கலாமுக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.
இதுவரை மீண்டும் ஜனாதிபதியாக மறுத்து வந்த கலாம் சமீபகாலமாக, தனது நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளார். நாட்டின் நலனுக்காக எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயார் என்று பட்டும் படாமல் கூறி வருகிறார்
இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலாமுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பேசுகையில்,கலாமுக்கு 2வது முறையாக குடியரசுத் தலைவர் பதவி அளிப்பது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு காரத் பதிலளிக்கையில், உ.பி. தேர்தல் முடிந்த பிறகே அதுகுறித்து நாங்கள் சிந்திக்கவுள்ேளாம்.
ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராக இருந்த காலம் முதல் இதுவரை யாருக்கும் 2வது முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கே.ஆர்.நாராயணனுக்கு 2வது முறை குடியரசுத் தலைவர் பதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை பாஜக கடுமையாக எதிர்த்தது என்றார் காரத்.
இடது சாரிக் கட்சிகள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை குடியரசுத் தலைவராக்க மும்முரமாக முயன்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் யாதவ் ஆகிேயார் மேற்கொண்டுள்ள 3வது அணி குறித்து காரத் கூறுகையில், 3வது அணிக்கான முயற்சிகளை சிலர் மேற்ெகாண்டுள்ளனர். அதிமுக, தெலுங்குதேசம், அசாம் கண பரிஷத், சமாஜ்வாடி உள்ளிட்ட சில கட்சிகள் இதற்குத் தயாராக உள்ளன.
தேர்தலுக்காக மட்டும் 3வது அணி இருக்கக் கூடாது. அப்படி அமைந்தால் அது மக்கள் மத்தியில் சந்தர்ப்பவாத அணியாக கருதப்படும். இந்த அணி குறித்த பேச்சு இப்போதுதான் தொடங்கியுள்ளது. இறுதி வடிவம் பெற நாளாகும்.
3வது அணி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்வம் காட்டினாலும் கூட மத்திய அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற மாட்டோம். அது ஆட்சி கவிழ்ப்புக்குச் சமம் என்றார் காரத்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications