பைக் தராததால் ஓடிய மணமகன்நின்றது கல்யாணம்-3 பேர் கைது
திருவண்ணாமலை:வரதட்சணையாக தர வேண்டிய மோட்டார் சைக்கிள் வராததால், கோபமடைந்த மணமகன் தாலி கட்ட வேண்டிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் கல்யாணம் நின்று போனது. இதுகுறித்து மணமகள் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் என்ற ஊரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் மகேஸ்வரி. இவர் சென்னையில் நர்சாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிறுபாக்கம் என்ற ஊரைச் சேர்ந்த ரிசர்வ் போலீஸ்காரர் ரவிக்கும் திருமணம் நிச்சயமானது.
30ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. திருமணத்தன்று மோட்டார் சைக்கிள் தருவதாக மணமகள் வீட்டார் வாக்களித்திருந்தினர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்தன. மணமகன் வீட்டிலேயே திருமணத்தை நடத்த முடிவாகியிருந்தது.
இதனால் மணமகள் வீட்டார் சிறுபாக்கம் கிராமத்துக்கு மணமகளுடன் வந்து சேர்ந்தனர். ஆனால் சொன்னபடி மோட்டார் சைக்கிளை அவர்கள் கொண்டு வரவில்லை. இதையடுத்து மணமகன் வீட்டார் பிரச்சினை எழுப்பினர்.
சொன்னபடி பைக் தந்தால்தான் கல்யாணம் என்று கறாராக கூறியுள்ளனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை கடைகள் விடுமுறை என்பதால் பைக் வாங்க முடியவில்லை. கல்யாணம் முடிந்த பின்னர் வாங்கித் தந்து விடுவதாக கூறியுள்ளனர்.
இதை மணமகன் வீட்டார் ஏற்கவில்லை. இந்த நிலையில் விடிகாலை 4 மணிக்கு பெண் அழைப்பு நடந்தது. ஆனால் அப்போது மணமகன் அங்கு வரவில்லை. வீட்டிலும் அவர் இல்லை. மேலும், மோட்டார் சைக்கிள் தராமர் கல்யாணம் நடக்காது. அனைவரும் வெளியேறுங்கள் என்று மணமகனின் வீட்டார் கூறி மணமகள் வீட்டாரை வெளியேற்றி விட்டனர்.
அதிர்ந்து போன அவர்கள் நேராக திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் ரவியின் சித்தப்பா தர்மலிங்கம், சகோதரி கவிதா, தம்பி மஜ்னு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications