கோவை குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது?
கோவை:கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதை வருகிற 31ம் தேதி அறிவிப்பதாக தனி நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
கோவை நகரில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் அல் உம்மா தலைவர் பாஷா, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 160க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கோவை சிறை வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த மாதம் இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் காவல் நீட்டிப்புக்காக சிறப்பு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.
அப்போது தங்களுக்கு தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதை தயவு செய்து அறிவிக்குமாறு நீதிபதி உத்திராபதியை வேண்டிக் கொண்டனர். அதற்குப் பதிலளித்த நீதிபதி, வருகிற 31ம் தேதியன்று, தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதை அறிவிப்பதாக தெரிவித்தார்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications