சபாநாயகர் மீது காகிதத்தை கிழித்து வீசியஅதிமுக எம்எல்ஏ!- சஸ்பெண்ட்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சபாநாயகர் மீது காகிதத்தைக் கிழித்து வீசிய அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சட்டசபையில் உயர் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடந்தது. அப்போது பேசிய சண்முகம்,

உயர் கல்விக்கு முக்கியத்தும் தந்தது அதிமுக அரசு தான். இன்று துணை வேந்தர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் நிலை தான் உள்ளது. சென்னை பல்கலைக்கழகம் நட்சத்திர அந்தஸ்தை இழந்துவிட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பெரும் முறைகேடு நடக்கிறது.

75 சதவீத வருகைப் பதிவு இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத முடியாது. சில காரணங்களுக்காக வர முடியாத மாணவர்களுக்காக அதை 10 சதவீதம் குறைத்திருக்கலாம்.

ஆனால், 40 சதவீதம் வருகை இருந்தாலே தேர்வு எழுதலாம் என்று திருத்தம் கொண்டு வந்துள்ளனர். இது மாணவர்களை சீரழிக்கும் செயல்.

யாரோ ஒரு சிலருக்காக இந்த விதி தளர்த்தப்பட்டதாக தெரிகிறது என்றார்.

(முதல்வரின் பேரன், அைமச்சர் ஆற்காடு வீராசாமியின் பேரனுக்காக வருகைப் பதிவு விதி தளர்த்தப்பட்டதாக ஜெயலலிதா ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது)என்றார்

அப்போது இடைமறித்த அைமச்சர் பொன்முடி, இந்த விஷயத்தில் வழக்கம் போல் கோயபல்ஸ் அறிக்கையை உங்கள் தலைவி வெளியிட்டுள்ளார் என்றார்.

உடனே அதிமுக எம்எல்ஏக்கள் ஒட்டு ெமாத்தமாக எழுந்து நின்று பொன்முடிக்கு எதிராக குரல் தந்தனர். பதிலுக்கு திமுகவினரும் பதில் தந்தனர். இதனால் கூச்சல் நிலவியது.

கோயபல்ஸ் என்ற வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுகவினர் கூறினர்.

அப்போது அவைைய நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, கோயபல்ஸ் என்ற வார்த்தை தவறான வார்த்தையல்ல என்றார்.

இதையடுத்து அதிமுகவுனர் மேலும் அதிகமாக கூச்சலிட்டனர்.

அப்போது எழுந்த பொன்முடி, தவறான செய்தியை மீண்டும் மீண்டும் சொல்வதற்குப் பெயர் தான் ேகாயபல்ஸ் என்றார். முதல்வரின் பேரனுக்கும் அைமச்சரின் பேரனுக்கும் சலுகை தரவே விதி தளர்த்தப்பட்டதாகக் கூறுவது தவறு.

முதல்வரின் பேரன் தேர்வு எழுத செல்லவில்லை. அைமச்சர் ஆற்காடு வீராசாமியின் ஒரு பேரனுக்கு 75 சதவீத வருகை பதிவு உள்ளது. இன்னொரு பேரனுக்கு 79 சதவீத வருகைப் பதிவு உள்ளதால் தேர்வு எழுத அனஉமதிக்கப்பட்டனர்.

சிண்டிகேட்டில் தீர்மானம் நிறைவேற்றித் தான் வருகைப் பதிவு திருத்தத்தை அண்ணா பல்கலைக்கழகம் ெகாண்டு வந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் சிண்டிகேட்டுக்கு செல்லாமலேயே நிறைய உத்தரவுகள் போடப்பட்டன. எனவே கோயபல்ஸ் அறிக்கையை உங்கள் தலைவி திரும்பப் பெற வேண்டும் என்றார்.

அப்போது அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினரான காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம் பேச எழுந்தார். இதற்கும் அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்து குரல் தந்தனர்.

அப்போது பேசிய அைமச்சர் துரைமுருகன், சிண்டிகேட் உறுப்பினர் சுதர்சன் உண்மையைய சொல்லட்டும் என்றார்.

பின்னர் எழுந்த சுதர்சனம், சிண்டிகேட் கூட்டத்தில் சிக்குன் குனியா, பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் 40 சதவீத வருகை இருந்தால் போதும், தேர்வு எழுத அனஉமதிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. ஒட்டு ெமாத்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தான் அவ்வாறு திருத்தம் செய்யப்பட்டது. இதில் தனிப்பட்ட யாருடைய நலனும் கருத்தில் கொள்ளப்படவே இல்லை என்றார்.

அப்போது பேசிய அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், தமிழகத்தில் சிக்குன் குனியாவே இல்லை என்று சொன்னீர்களே. இப்போது எங்கிருந்து வந்தது சிக்குன் குனியா என்றார்.

இதற்கு பதிலளித்த பொன்முடி, சிக்குன் குனியாவால் யாரும் சாகவில்லை என்று தான் சொன்னோம். நோயே இல்லை என்று சொல்லவில்லை. கேட்பதை முழுசாக கேட்டுவிட்டு பேச வேண்டும் என்ற பொன்முடி, ஜெயலலிதா குறித்து ஒரு வார்த்தையை சொன்னார்.

இதையடுத்து அதிமுகவினர் கடும் கூச்சலிட்டனர். புரட்சித் தலைவி பற்றி எப்படி அப்படி சொல்லப் போச்சு என்று குரல் எழுப்பினர்.

அப்போது எழுந்த பொன்முடி, நான் சொன்ன வார்த்தை அதிமுகவினரை புண்படுத்தியிருந்தால் அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கலாம் என்றார். இதையடுத்து அந்த வார்த்தை நீக்கப்பட்டது.

ஆனாலும் அதிமுகவினர் விடாமல் கூச்சலிட்டபடியே இருந்தனர்.

அப்போது சபாநாயகர், எல்லோரும் உட்காருகிறீர்களா இல்லை நடடிக்கை எடுக்கட்டுமா என்றார். ஆனாலும் அதிமுகவினர் எழுந்து நின்று கத்திக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர்.

அவ்வாறு சி.வி.சண்முகம் வெளியேற்றப்பட்டபோது தன்னிடம் இருந்த காகிதத்தைக் கிழித்து சபாநாயகர் மீது வீசினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சண்முகத்தை இந்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய அவை முன்னவரான அைமச்சர் அன்பழகன் பரிந்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து சண்முகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+