புலிகளுக்கு கருணாநிதி மறைமுக ஆதரவு-ஜெ.
சென்னை:முதல்வர் கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு மறைமுக ஆதரவு தருகிறார் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
திமுக அரசால் தயாரிக்கப்பட்ட காவல்துறை மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுள்ளது.
அதில் தமிழக காவல்துறையினரால் இலங்கை தமிழர்களிடம் இருந்து பணம், எல்க்ட்ரிக் டெட்டனேட்டர்கள், வெடிபொருள் பூஸ்டர்கள், இரும்பு பால்ரஸ்கள், ஏ.கே. 56 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாகவும், இது தொடர்பாக இலங்கை தமிழர்கள் கைது செய்யப்படதாகவும் காவல் துறை மானியக் கோரிக்கையில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ஆயுதக் கடத்தில் ஈடுபட்டது விடுதலைப் புலிகள் தான் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். ஆனால் திமுக அரசு ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டது விடுதலைப் புலிகள் என்று கூறமால் இலங்கை தமிழர்கள் என்று கூறியுள்ளதான் மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு மறைமுக ஆதரவு தருகிறார் என்பதையே இச்செயல் உணர்த்துகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்திய கடலோரக் காவல் படையினர் ரோந்து பணியின் ஈடுபட்டிருந்தபோது பாக் ஜலசந்தி அருகில் இயந்திர படகு ஒன்றை வழி மறித்து 4 இலங்கை தமிழர்கள் உள்பட 5 பேரை கைது செய்து ஒரு ஏ.கே.56 ரக துப்பாக்கி, 124 தோட்டாக்கள், 5 கையெறி குண்டுகள், வெடிமருந்துக்கள் நிரப்பப்பட்ட ஒரு ஜாக்கெட், 8 பாரல் இரசாயனப் பொருட்கள், ஒரு சாட்டிலைட் தொலைநோக்கி மற்றும் ரேஷன் பொருட்கள் அடங்கிய பைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக கியூ பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதான் விளைவாக பறிமுதல் செய்யப்பட்ட படகின் பைபர் கிளாஸ் பாடிக்கு உள்ளே சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மறைந்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று கடந்த பிப்ரவரி 20ம் தேதி அந்த படகு நடுக்கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டு, வெடி பொருட்கள் செயலிழக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது அந்தப் படகு வெடித்து கடலில் மூழ்கியது என்று காவல் துறை மானியக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடுமையான ஆயுதங்ளை கடத்துகிறவர்கள் அப்பாவி இலங்கை தமிழர்களாகவா இருப்பார்கள்? விடுதலைப் புலிகளைத் தவிர்த்து வேறு யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபட முடியாது.
விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு எப்போதும் ஆதரவு அளிக்காது என்று சட்டமன்றத்தில் கருணாநிதி சொன்னாலும், விடுதலைப் புலிகள் மீதும், அதன் இயக்கத்தின் மீதும் கருணாநிதிக்கு எப்போதும் பற்றும், பாசமும் இருக்கிறது என்பதற்கு காவல் துறை மானியக் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவலே போதுமான ஆதாரமாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications