ஊட்டியில் பின்னியெடுத்த பனிக்கட்டி மழை:நீரில் மூழ்கிய பொட்டானிகல் கார்டன்
ஊட்டி:ஊட்டி உள்பட நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திடீரென கன மழை பெய்தது. இதில் ஊட்டி தாவரவியல் பூங்கா நீரில் மூழ்கிப் போனது.
தமிழகத்தை வெயில் வாட்டோ வாட்டு என வாட்டி வரும் நிலையில் பலரும் ஊட்டி, கொடைக்கானல் பக்கமாக ஓட ஆரம்பித்துள்ளனர். ஆனால், அங்கும் வரலாறு காணாத வெயில் மண்டையை பிளந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு எரிச்சலே மிஞ்சியது.
![]() |
இந் நிலையில் கடந்த இரு தினங்களாக ஊட்டியில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. நேற்று முன் தினம் கன மழை பெய்தது. அதே போல நேற்று காலையும் மழை பின்னி எடுத்தது.
பல இடங்களில் பனிக் கட்டியுடன் மழை பெய்தது.
கன மழையால் காந்தல், குருசடி ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய் நிறைந்து நீர் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.
பொட்டானிக்கல் கார்டன், சிறுவர் பூங்கா, பஸ் ஸ்டாண்ட் ஆகியவை தெப்ப குளங்களாகின. அதே போல சாலைகளிலும் ஆங்காங்கே மண்ணரிப்பு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா வந்தவர்களின் வாகனங்கள் பெரும் சிரமத்துக்குள்ளாக நேர்ந்தது. சுற்றுலா வந்தவர்களும் பூங்காக்களை சுற்றிப் பார்க்க முடியாமல் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!













Click it and Unblock the Notifications