கொழும்பு விமான நிலையத்தை3 மாதங்களுக்கு இரவில் மூட முடிவு
கொழும்பு:விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலை தொடர்ந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை 3 மாதங்களுக்கு இரவு நேரத்தில் மூடி வைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
விடுதலைப் புலிகளின் வான் புலிகள் பிரிவு இதுவரை மூன்று முறை விமானத் தாக்குதலை நடத்தியுள்து. இதை சமாளிக்க முடியாமல் இளங்கை படைகள் தவித்து வருகின்றன.
விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலால் பல விமான நிறுவனங்கள், இரவு நேரத்தில் தங்களது சேவையை நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ளன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை 3 மாதங்களுக்கு இரவு நேரத்தில் மூடி வைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. வருகிற 10 ம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு இரவு நேரத்தில் கொழும்பு விமான நிலையம் மூடப்பட்டிருக்கும்.
அதேபோல கட்டுநாயகே விமானப்படைத் தளமும் இரவு நேரத்தில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கையில் மனித உரிமை மீறல் நாளுக்கு நாள் பெருகி வருவதால் அந்நாட்டுக்கான நிதியுதவியை இங்கிலாந்து அரசு நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
அப்பாவிகள் பலியாவது, ஆள் கடத்தல், கற்பழிப்பு, தமிழர் பகுதியில் நடத்தப்படும் சரமாரித் தாக்குதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல் செயல்களைத் தடுக்க இலங்கை அரசு உரிய நடவடிக்ைக எடுக்கவில்லை. எனவே இலங்கைக்கான கடன்உதவியை நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக இங்கிலாந்து சர்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாமஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கைக்கு ரூ. 28 கோடி நிதியுதவியை அளிக்க இங்கிலாந்து முடிவு செய்திருந்தது. அதில் பாதித் ெதாகை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. மீதத் ெதாகையைத்தான் தற்ேபாது நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications